கர்ப்பிணிக்கு பயனாகும் அடங்கல் யாவை ?
சோரத்தீண்டாக் காலம், மூலாதார மென் அடங்கல் செய்தல் (நம் கால்கள் மேல் உட்காரவைத்து மேல் உயர்த்துதல்) வாந்தி விரல்போட்டு எடுக்க வைத்தல் , கவளி அடங்கல் , மூக்கில் கோலமணி நாராயனமணி அடங்கல்.
துடப்பொருத்திலிரண்டு விரலுக்கு தாழ்வாக , தாமப்பா கீழ்த்தாரை அடங்கலாகும் .....(வ .நி .) இருமல் ஏந்தித் தடவவும்.
கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் உள்வர்மங்கள் யாவை ?
- ஆனந்த வாயுக்காலம் -நேர் வர்மத்துக்கு '1 ' இறை வலம்
- உதிர வாயுக்காலம் - தோளில் '1 ' இறைக்கு மேல்
- பொருமி வாயுக்காலம் - முதுகில் '1 ' இறைக்கு மேல்
- நேர்வர்மம் மார்பு +(மார்பு மறுபுறம் )
- வீர்ச்சி வர்மம் - அடிவயிறு , ஆமைக்காலம் -கால்
கர்ப்பிணிகளுக்கான உள் வர்மங்கள் - ஆறின் குறிகுணங்கள்
- ஆனந்த வாயுக்காலம்-குன்ம வாயு, பெண்களுக்கு மலடும் , ஆண்களுக்கு ஆந்திரவாயு உண்டாகும்
- உதிரகாலம் 5ம் மாதம் முதல், கொளுத்து வலி , குன்மம், நீர்க்கடுப்பு , நீரழிவு , நாட்பட குணமாகும்
- பொருமி காலம்-குழந்தைகளுக்கு கை -கால் சரியாக அசைக்க முடியாமை , தாய்க்கு இடப்பக்க வாதம் உண்டாகும். உடல் மெலியும்
- நேர் வர்மம் - வயிறு ஊதும் , களைப்பு , வேதனை அதிகம் உண்டாகும்
- வீர்ச்சி வர்மம்-கால் ஊன்றி நடக்க முடியாது . தீராது.
- ஆமைக்காலம்-அடிவயிறு தரிப்பு , சீதம், மயக்கம் உண்டாகும்.
கர்ப்பிணிக்கு வர்மம் கொண்டதை சாத்தியம் அறிக
' ..............அப்பனே அலவில் இருவிரலுக்கு தாழை
அழகான நரம்பொன்று நூல்போலுண்டு
துண்டுவிரலிருந்திப் பார்க்கும்போது
அசயுமிடம் எல்போலே நரம்பேகண்டால்
அப்பனே அறைக்க வேண்டாம்......'(வ .நி .)
குழந்தைகளுக்கு உரங்கொள்ளுதல்
- குழந்தை எடுக்கும்போது , படுக்கையில் போடும்போது எடுப்பவரின் கைபட்டு உரங்கொள்ளல்
- எடுப்பவரின் வாசிபட்டு உரங்கொள்ளல்
- எடுப்பவரின் ரூப (நயனம் ) உரங்கொள்ளல் (கண் திருஷ்டி )
- படுக்கை , மடிகிடக்கையில் உரங்கொள்ளல்
- தாய்ப்பால் தோடத்தினால் உரங்கொள்ளல்
- ஒலி -ஒளி தோடத்தினால் உரங்கொள்ளல்
- குழந்தை அழும் தோடத்தினால் உரங்கொள்ளல்
- இதர நோய்களினால் உரங்கொள்ளல்
உறம் விழுந்தை கண்டுபிடிக்கும் முறை
- குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கும்
- குழந்தை பால் எதுவும் குடிக்காது
- குழந்தையின் காதை இழுத்து பார்த்தால் விடாமல் சுள்ளென்று அழும்
குழந்தைக்கு உறம் தட்டும் முறை
முதல் முறத்தை எடுத்துக் கொண்டு குளந்தையை அதில்படுக்கவைத்துவலது தென்புறமாக தாலாட்டு போல ஆட்டவும். பிறகு அரிசி புடைப்பது போல் இரண்டு மூன்று தடவை புறட்டி எடுத்து பிறகு திருநீறு பூசி முதுகில் தடிவி கொடுத்து தண்ணீர் கொடுக்கவும். பிறகு சாம்பிராணியில் மஞ்சள் பொடி தூவி புகையை குழந்தை முகத்தில் காட்டவும் .தாய்ப்பால் கொடுக்கவும் .
குண்டான உடல் மெலிவதற்கு வர்மா மருத்துவப் பரிகாரங்கள் உண்டா ?
இதற்கு விரிவான முறையான சித்த மருத்தவப் பரிகாரங்களுடன் சிலகுறிப்பிட்ட வர்மப்புள்ளிகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம்.சக்திக்கூறல் அடங்கல் , குதிரைமுக அடங்கல், அன்னகாலம் , பள்ளை அதி வீரசங்கார அடங்கல் ஆகியவைகள் பயனுள்ளதாக அமையும்.
வர்மத்திற்கும் , ஆறு ஆதாரங்களுக்கும் தொடர்பு உண்டா ?
இரண்டையும் பிரித்தறிய முடியாத அளவிற்கு உண்டு.ஆறு ஆதார வர்மபுள்ளிகள் உள்ளன. வாசியினால் இயங்கும் ஆறு ஆதாரங்களையும் வர்மங்களையும் அனைவரும் நன்கறிவர்.
வர்மத்தைச் சரிசெய்யும் மருத்துவர்களுக்குக் கன்மப்பிணிகள் உண்டாகுமா ?
உயிர்களால் துன்பங்களை நீக்க செய்யும் இப்பணியை புனிதமாகக் கருதும் அதற்குரிய முறையுடனும் இறைத்துணைக் கொண்டு அளித்து வந்தால் நன்மையை கிடைக்கும் .
அடிபட்டு மயங்கிய நிலையில் எந்த எதிர்க்குறி குணங்களும் காணப்படாமல் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையென்ன ?
சர்வாங்கத் தடவல் செய்யலாம் அல்லது சிரசடங்கல் செய்ய வேண்டும் . ஆசாம காலத்தை அழுத்தி பிடரிக் காலத்தை தொட்டுத் தழுவி அழுத்திப் பிடிக்கவும். உள்ளங்கால் வெள்ளையைத் தட்டித்தடவ நோயாளிக்கு மயக்கம் தெளிய வாய்ப்புண்டு.
சுகப்பிரசவத்திற்கு வர்மபுள்ளிகள் ஏதுவுண்டா?
சுகப் பிரசவத்திற்கு உந்தித்தடவல், பள்ளைத் தடவல், நாங்கன பூட்டுத் தடவல் மூணாரத் தடவல் , அகாதாரை , புரதாரைத் தடவல் ஆகிய வர்மத்தடவல் இங்கு பயனுள்ளதாக அமையும் .
வர்மத்தின் பிராணச் செயல்பாடு என்ன ?
பிரபஞ்சத்தில் ஆகாயத்திலிருந்து ஒவ்வொரு பூதங்களும் உருவெடுப்பதற்கு பிரணாச் சக்தியே அவசியம் போல நமது உடலிலும் உறுப்புகள் செயல்பாடுகள் அனைத்திற்கும் பிரணாச் சக்தியே மையமாகும்.பிரணாச் சக்தியே பிரபஞ்சத்தையும் , உடலையும் இயக்குகிறது. பிரணாச் சக்தியை என்பது பஞ்சப்பூதச் சக்தி , கிரகக்கோள்களின் சக்தி, உயிரிடைச் சக்தி இவைகளின் தொகுப்பாகும் என்பதை அறிய வேண்டும் .
தசைவாதம் என்னும் மையோவதி , இளம்பிள்ளை வாதாம் , நாட்பட்ட பக்கவாதம் , சிரக்கம்ப வாதம் என்னும்(செரிபிரல் பால்சி) போன்ற நாட்பட்ட நோய்களுக்கு வர்ம மருத்துவப் பரிகாரங்கள் என்ன ?
வர்ம மருத்துவத்தில் மேற்குரிய ஒவ்வொரு நோய்களுக்கும் முறையாக வர்ம உள் , வெளி மருந்துகள் வர்மப் புள்ளி தடவல் முறைகள் போன்றகூட்டு சிகிச்சை முறைகள். இச்சிகிச்சை முறைகளைக் கொண்டு முப்பதுமுதல் அறுபது சதவீதமே குணம் பெற முடிகிறது என்பது அனுபவ உண்மை .
பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அபரிதமான வலிக்கு வர்மபுள்ளிகள் எதுவும் உள்ளனவா ?
உந்தித்தடவல், பள்ளைத் தடவல், அன்னகாலத் தடவல் ஆகியவை பயனுள்ளதாக அமையும். இதை தவிர இளங்குறுத்து வர்மம் , உதிர வர்மம் , நட்டுவது வர்மம் ஆகிய வர்மப் புள்ளிகள் பயனாகும் .
உயரமான வாகனத்திலிருந்து கீழே குதித்தால் ஏற்பட்ட குதிங்கால் வீக்கம் வலிநாள்பட்டது இது வர்மத்தால் பாதிக்கப்பட்டிருக்குமா ? அப்படியானால் என்ன வர்மம் அதற்கு நிவாரணம் என்ன ?
1. இது எலும்பு , தசையில் அடிப்பட்டிருக்கலாம் . கரண்டை வர்மம் ,
உப்புகுத்திக் கால வர்மம் பயன்படுத்தலாம் .(பாதிக்கப்பட்டு இருக்கலாம் )
2. செப்பு வர்மம் முதல் தடவ வேண்டும் .
3. காலில் அகக்கண்வர்மம் மேலிருந்து கீழ்நோக்கி புறக்கண் வர்மம் வரை
தடவ வேண்டும் .
4. நடக்க முடியாத நிலையில் சக்தி வர்மத்தை பயன்படுத்தலாம்.
5. மருந்து வெளிப்புறம் மஞ்சள்பொடி ,சுண்ணாம்பு பொடி , செங்கல் பொடி,
தேவதாரு பட்டை, மாவிலங்கப்பட்டை, அகில்பட்டை , சுக்கு தூள் எல்லம்
ஒன்று சேர்த்து கிழி சுட்டி பழக்கத்தில் உள்ள எண்ணையில் சூடு செய்து
மூழ்கச் செய்து ஒத்தடம் கொடுக்கவும்.
வாத , பித்த , கபம் எனும் முக்குற்ற நோய்களையும் , சரிப்படுத்த வர்மப் பரிகாரம் என்ன ?
வர்ம சர்வாங்கத் தடவல் முறை மருத்துவமேச் சிறந்தது .
எலும்புப் பொறுத்தப் பாதிப்புக்கு வர்மப் பரிகாரம் என்ன ?
1. பொருத்தடங்கள்
2. சந்தி அடங்கல்
3. குண்டடங்கள்
4. முண்டுடங்கள்
5.கண்ணுடங்கள்
6. கோச்சிடங்கள்
7. மேல் தாரை , கீழ்த்தாரை அடங்கல்
8. மடக்கடங்கள்
போன்ற அடங்கல் முறைகள் வர்ம அடங்கல் முறைகள் பயனுள்ளதாக
அமையும் .
வர்மமும் , தசவாயுக்களும் தொடர்பு ?
சில வர்மங்கள் பாதிக்கப்படும் போது உடலை இயக்கம் குறிப்பிட்ட தசவாயுக்கள் பாதிக்கப்படுகின்றன . அங்கனம் பாதிக்கப்படும் போது தக்க குறிகுணங்களைத் தருகின்றது .வர்மம் , தசநாடி , தசவாயு இவைகளை பிரிக்க முடியாதது .இருப்பினும் சில குறிப்பிட்ட வர்ம பாதிப்புகள் எளிதில் குறிப்பிட்ட வாயுக்களை துயரடைச் செய்யும் உதாரணமாக.
- 1.கண்ணாடிக்காலம் ----- பிராணன் , உதானன்
- 2.வெற்றிலைக்காலம் ----- கூர்மன்
- 3.கொம்புகுத்திக்காலம் ----- நாகன் , உதானன்
- 4. கொண்டைக் கொல்லி ----- நாகன், வியானன்
- 5. சீறும் கொல்லி ----- பிராணன் , நாகன்
- 6. பிடரி வர்மம் ----- அபானன் , கூர்மன், நாகன்
- 7. செவிக்குறி க்காலம் ----- உதானன்
- 8. பொய்கைகாலம் ----- கூர்மன்
- 9. நல்லிருப்புக்காலம் ----- உதானன்,நாகன்,கூர்மன்
- 10.திலகர்க்காலம் ----- அபானன், தேவதத்தன்,கூர்மன்
- 11. உச்சி வர்மம் ----- அபானன், பிரானன்
வர்மம் மற்ற உயிரினங்களுக்கு ஏதும் உண்டா ?
முடியாதது .இருப்பினும் சில குறிப்பி(வர்மம் மனிதர்களுக்கு மட்டும் இன்றி ஆடு , மாடு, கோழி, போன்ற உயிரினங்களுக்கும் உண்டு. உயிர் ஓட்டத்தின் ஒழுக்கம் தான் வர்மம் உயிர் உள்ள ஜீவராசிகளுக்கு வர்மம் உண்டு .)